தனியே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ள நிலையில் புதிய பாலத்தில் வரும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பழைய பாலத்தின் வழியாக திரும்பி செல்வதால் புதிய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி சேர்ந்தவர் இசக்கி தாய் ஆள் நடமாட்டம் இல்லாத புதுப்பாலம் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இசக்கி தாயின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து இசக்கி தாய் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.