Categories
மாநில செய்திகள்

கல்லூரி திறந்த முதல் நாளிலே ” படிக்கட்டில் கால் slip ஆயி B.Com மாணவி பலி”….. பெரும் சோகம் ….!!!!!

 படிக்கட்டில் இருந்து உருண்டு   விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் சர்மா -சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஷிணி  என்றால் மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ரோஷிணி  கல்லூரி திறந்த முதல் நாள் என்பதால் காலை 8 மணிக்கு கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வகுப்பறைக்கு வரவில்லை. இந்நிலையில் ரோஷிணி கல்லூரியில் உள்ள படிக்கட்டு அருகே மயங்கி நிலையில் கிடந்துள்ளார். மேலும் தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இவரது சத்தம் கேட்டு வந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரோஷிணி  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த உதவி கமிஷனர் அரிகுமார், இன்ஸ்பெக்டர் வேலு, சப்- இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரியில் ஆய்வு செய்தனர். இப்போது ரோஷினி படிக்கட்டில் இருந்து உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. மேலும் இது குறித்து காவல்துறையினர் மர்ம சாவு சட்டப்பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

Categories

Tech |