Categories
மாநில செய்திகள்

SHOCK: தக்காளி விலையை கேட்டதும்….. கன்னத்தில் கை வைத்த இல்லத்தரசிகள்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இவ்வாறு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தொடர் மழை எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. வழக்கமாக 90 வாகனங்களில் வரும் தக்காளி தற்போது 40 இருந்து 45 வாகனங்களில் மட்டுமே வருவதால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

இதனால், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Categories

Tech |