அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் இர்பான் பதான், ஸ்ரீநிதி செட்டி, மற்றும் மிருணாளினி, ரவி போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் இந்த படம் கடந்த புதன்கிழமை திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. மகன் துருவுடன் விக்ரம் இணைந்து நடித்த முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விக்ரம் படம் திரையரங்குகளில் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான கோப்ரா திரைப்படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வந்தது.
விக்ரமின் உழைப்பை இயக்குனர் வீணடித்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 மணி நேரம் மூன்று நிமிடம் ஓடும் இந்த படத்தில் நீளம் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய குறையாக பேசப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் பற்றி ஏராளமான தகவல்கள் இணையதளத்தில் பரவி வந்தது. லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்திற்கு முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த வருடம் வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் வலிமை, பீஸ்ட், விக்ரம் படத்திற்கு பிறகு கோப்ரா மூன்றாவது இடத்தை பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோப்ரா திரைப்படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக பேசப்பட்ட நிலையில் தற்போது படத்தின் நீளத்தில் 20 நிமிடங்களை படக் குழுவினர் குறைத்து இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் கோப்ரா படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.