இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் அவரவர் சொத்து மதிப்பின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமாகும். அதன்படி ஆண்டுதோறும் அரசு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் இணைப்பு வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்து வருகிறது. இதனை செலுத்த தவறுபவர்களுக்கு அபராத கட்டணங்களும் வசூலிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் சொத்துவரி மற்றும் தொழில் வரி உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அவ்வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் 600 சதுர அடிக்கு குறைவான குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், 600 முதல் 1200 சதுர அடி வரை உள்ள குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும், அதற்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100% சொத்து வரி உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.தமிழகத்தில் புதிய சொத்து வரி மட்டுமல்லாமல் ஏற்கனவே செலுத்தாமல் நிலுவையில் உள்ள சொத்து வரியையும் செலுத்த உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.எனவே இந்த மாதத்தின் இறுதிக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது அபராத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.