Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்ற மர்ம நபர்கள்”…. அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய பொதுமக்கள்…!!!!!!

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்றதால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள நாராயணதேவன்பட்டியில் நேசன் கலாசாலை அரசு உதவி பெறும் பள்ளி இருக்கின்றது. இந்த பள்ளி, நேசன் கலாசாலை பள்ளி வீதியில் இருக்கிறது. நேற்று நள்ளிரவு அந்த வீதிக்குள் மர்ம நபர்கள் புகுந்து நாட்டு வெடிகுண்டுகளை அந்த சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார்கள்.

இதனால் அப்பகுதியில் பலத்த சத்தமும் கரும்புகைமூட்டமும் இருந்தது. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள். பின் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வையிட்டதில் ஆறு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |