Categories
அரசியல் மாநில செய்திகள்

தன்மானம் போச்சு… அவமானமா இருக்குது…. இத சர்வாதிகாரத்துல சேக்காதீங்க…! ”கொடுங்கோல்” மத்திய அரசு… பாஜகவை சீண்டிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவங்க தான் சுயமரியாதை பேசினாங்க. தன்மானத்துக்கென்று கட்சி வெச்சவங்க இவங்கதான், சுயமரியாதைக்கென்று அமைப்பு வச்சது இவுங்க தான். இன்னைக்கு தன்மானம் இழந்து,  அவமான சின்னங்களாக அழைவது நம் இனம் தான்.

நல்ல மருத்துவரை உருவாக்க அமெரிக்காவுல இருக்கிற ப்ரோ மெட்ரிக்குன்னு அந்த நிறுவனம் ஏன் இங்கே தேர்வு நடத்தது என்று கேட்கிறோம் ? அமெரிக்காவில் இருக்கிற தனியார் நிறுவனத்துக்கு என் மண்ணுல தேர்வை நடத்தி தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன வருது ?

மூக்குத்தியை கழட்டு , துப்பட்டாவை கழட்டு, தலை முடியை விரிச்சு விடுன்னு படுத்துற பாடுல என் பிள்ளைல ஒரு பதட்டம் அடைந்து, என்ன மனநிலையில் தேர்வு எழுதும். நீ உள்ளாடையை கழட்டி விட்டதால் என்ன கேள்விக்கு பதில் வந்திருக்கும் ? உரைஞ்சி போயிடும்.

அதனாலதான் அந்த தேர்வு முடிஞ்ச பிறகு அரங்கை விட்டு வெளியே வர ரெண்டு மணி நேரம் இருக்கு. கல்வி கொள்கையை ஏற்றால் தான் நான் நிதி தருவேன் என்று சொல்வது,  இது கொடுங்கோள்.  சர்வாதிகாரத்தில் இதை சேர்க்க கூடாது என தெரிவித்தார்.

Categories

Tech |