Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நாளை( செப் 4)….. வேலூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…. சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்….!!!!

நாளை தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தமிழக முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், பஜார், ஆட்டோ நிறுத்தம், பள்ளிகள் என 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது பற்றி மக்களிடையே விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் சுகாதாரத்துறையினர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த தடுப்பூசி போடும் வகையில் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |