Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்…. செப்5,6,7,8,9,10,11,12,13,14,15 தேதிகளில்….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு பள்ளிகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தூய்மை நிகழ்வுகளை செய்வதற்கு மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது என்னென்ன தூய்மை நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சமூக விழிப்புணர்வு தினம் என்பதால் சமூக இணையதளம் மற்றும் குழு கூட்டங்கள் மூலமாக சுத்தம் மேம்பாடு மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வழங்கலாம் எனவும், தூய்மை நிகழ்வுகள் குறித்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்ததாக திங்கள்கிழமை பசுமை பள்ளி இயக்க நாள் என்பதனால் பள்ளியில் தண்ணீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு செப்டம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் பள்ளி மாணவர்களுக்கு சுத்தம், சுகாதார பழக்கங்கள் குறித்து ஓவியப்போட்டி, பேச்சு போட்டி நடத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் செப்டம்பர் 8 மற்றும் 9ஆம் தேதி கை கழுவும் தினம் என்பதால் அன்றாட வாழ்க்கையில் மாணவர்கள் எப்படி கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது? என்பது குறித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி தன் சுத்தம் மற்றும் சுகாதார தினம் என்பதால் தினமும் மாணவர்கள் கை கால்களில் உள்ள நகங்களை தூய்மையாக வெட்ட வேண்டும், சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை அறிவுறுத்த வேண்டும். பின்னர் செப்டம்பர் 15ஆம் தேதி தூய்மை நிகழ்வுகள் சார்ந்த கண்காட்சி தினம் என்பதால் தூய்மை சார்ந்த நிகழ்வுகளை ஓவியம் அல்லது கார்ட்டூன்களாக வரைந்து போட்டியை ஏற்படுத்தலாம். அடுத்ததாக செப்டம்பர் 13, 14 பள்ளியில் தூய்மை சார்ந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும், 15 ஆம் தேதி தூய்மை நிகழ்வுகளை பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |