Categories
தேசிய செய்திகள்

“இவ்வளவு எடை பைகளை தான் சுமக்கணும்” பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. அதிரடி உத்தரவு….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுடைய பள்ளி பைகளின் எடை குறித்த வழிகாட்டுதலை மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பைகளின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரை இருக்க வேண்டும். அதேபோல மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1.7 முதல் 2.5 கிலோவாகவும, 6 முதல் 7-ம் வகுப்புக்கு இரண்டு முதல் மூன்று கிலோவும், எட்டாம் வகுப்புக்கு 2.5 முதல் நான்கு கிலோவும், ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு 2.5 முதல் 4.5 கிலோ வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாரத்திற்கு ஒருமுறை மாணவர்கள் பைகள் இல்லாமல் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட வேண்டும் என்பதையும் பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் மூன்று மாதங்களுக்குப் பிறகு பள்ளி பைகளின் எடையை கண்காணிக்கும் பொறுப்பு மாவட்ட கல்வித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. நிர்ணயித்த பாட புத்தகங்களை விட அதிகமான புத்தகங்களை மாணவர்கள் வைத்திருக்கக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 2 மணி நேர வீட்டுப்பாடம் தான் வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் அறிவிப்பு பலகை மற்றும் வகுப்பறைகளில் பையின் எடை அளவை வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |