Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை முன்னிலையில்…. பாஜகவில் இணைந்த “நடிகர் அஜித்தின் தோழி”…. யார் தெரியுமா….???

பிரபல கார், பைக் ரேசரும், சினிமா நடிகையுமான அலிசா அப்துல்லா, அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இரும்புக் குதிரை, சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், ரேசிங்கில் இந்தியாவிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். மேலும், பாரத நாட்டின் முதல் பெண் தேசிய பந்தய சாம்பியன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இதுதவிர, பெண் அஜித் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர் அஜித் குடும்பமும் இவரது குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள். குறிப்பாக அஜித்தின் பெண் தோழி பட்டியலில் இவருக்கு தான் முதலிடம். இந்நிலையில் இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார்.

Categories

Tech |