மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தில் மெல்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜான் சேவியர் நகர் பகுதியில் வசிக்கும் டைசன் என்பவரின் மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விமல் மற்றும் டைசன் ஆகியோர் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருடியது தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியில் வசிக்கும் கர்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கர்ணனை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.