Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்திற்குள் புகுந்த செந்நாய்கள்”…. ஆடுகளுக்கு நேர்ந்த சோகம்…. விவசாயிகள் கவலை…!!!!!

சூளகுண்டா கிராமத்தில் செந்நாய்கள் கடித்ததில் 23 ஆடுகள் உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே இருக்கும் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் மாதேஷ் மற்றும் கிருஷ்ணப்பா. விவசாயிகளான இவர்கள் ஆடுகளை வளர்த்து வருகின்றார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கொட்டைக்குள் ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்கள். அப்பொழுது உளிபெண்டா வனப்பகுதியில் இருந்து வந்த செந்நாய்கள் மாதேஷின் 20 ஆண்டுகளையும் கிருஷ்ணப்பாவின் 3 ஆடுகளையும் கடித்தது.

இதில் 23 ஆண்டுகளும் உயிரிழந்தது. இதனால் அவர்கள் கவலை அடைந்து வனத்துறையினர்க்கு தகவல் கொடுத்தார்கள். அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பார்வையிட்டார்கள். இதன் பின்னர் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தார்கள். மேலும் செந்நாய்கள் கூட்டம் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதால் தனிப்படை அங்கு கண்காணிப்பில் போடப்பட்டிருக்கின்றது. இதன்பின் உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு பெற்று தருவதாக வனத்துறையினர் உறுதி அளித்தார்கள்.

Categories

Tech |