Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கண்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார்”…. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நால்வர்…!!!!!!

சூளகிரி அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் இருக்கும் கொல்லபள்ளி அருகே பெங்களூரில் இருந்து சொகுசு கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த கார் ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்புறம் மோதி அதன் அடியில் புகுந்தது.

இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்த அரியானா மாநிலத்தை சேர்ந்த டிரைவர் உட்பட நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உய்த்தப்பினார்கள். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், நான்கு பேரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு தற்பொழுது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |