வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் சிம்பு எழுப்பிய கேள்விக்கு கமல் பதில் அளித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு.
இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் கிராமத்து இளைஞனான சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்து வருகிறார். இத்திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் படத்தின் டிரைலரை வெளியிட்டார்.
இதை அடுத்து மேடையில் பேசிய சிம்பு கமலிடம், உங்களது எந்த திரைப்படத்தை நான் ரீமேக் செய்ய வேண்டும் அல்லது இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என கேள்வி கேட்டதற்கு கமல் பதிலளித்ததாவது, நீங்கள் நிறைய திரைப்படங்கள் நடிக்க வேண்டும். ரீமேக், இரண்டாவது பாகத்தில் எல்லாம் நடிக்க வேண்டாம். என்னுடன் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். இதனால் கமல்-சிம்பு கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாகுமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.