Categories
அரசியல் மாநில செய்திகள்

மனநிலையை நாடிப்பிடித்து பார்த்து….. ஒற்றை ஆளாய் சாதித்த உதயநிதி….. செம குஷியில் திமுக வட்டாரம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வந்த நடிகர் கமலஹாசன் அரசியலில் குதித்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் அதிமுக, திமுக கட்சிகளை விமர்சித்து வந்ததோடு மட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்ட சபை தேர்தல் மற்றும் நகர்புறஉள்ளாட்சி தேர்தல்களையும் மக்கள் நீதி மையம் தனித்தே போட்டியிட்டது. ஆனால் சொல்லிக் கொள்ளும் படியாக வாக்குகளை பெறாவிட்டாலும் பிரபல டிவி நிகழ்ச்சி மூலம் கமல் மார்க்கெட்டை உச்சத்திலேயே வைத்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

இதன் மூலம் கமலஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்த நன்றிக்காக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படம் தயாரிப்பதற்கு கமல் முன் வந்துள்ளதாகவும் அதற்கு பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அரசியல் ரீதியாக சில மாற்றத்தை ஏற்றுஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் அங்கீகாரம் பெற்றே ஆக வேண்டும் என்பதில் கமலஹாசன் உறுதியாக இருக்கிறார்.

இவரின் இந்த மனநிலையை தெரிந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் இனியும் நீங்கள் தனித்து நின்று சீமானை போல கட்சியின் பொழிவை இழந்து விட வேண்டாம். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அதற்கான ஆதாரம் இருக்கு என்று நேரடியாகவே தூண்டில் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பிடித்துக் கொண்ட கமலஹாசன் அப்படி என்னதான் கிடைக்கும் என்று ஓபனாக கேட்க, ஒரே வாரத்தில் திமுக தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வைகோ- கணேச மூர்த்தி ஸ்டைலில் கூறியுள்ளார்.

இதனை கமலஹாசன் ஏற்றுக் கொண்டதாகவும் தேர்தல் நெருங்கும் வரை அமைதி காப்போம் என்றும் இரண்டு தரப்பும் கூறியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஒற்றை ஆளாக சாதித்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாதுர்யத்தை அறிந்து திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களுடன் கூட மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Categories

Tech |