Categories
உலக செய்திகள்

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு வெளியுறவுத்துறை முடிவு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியுள்ளது. அதில்132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த சொகுசு கப்பலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 210ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கப்பலில் உள்ள அனைவரையும் சோதிக்க ஜப்பான் முடிவு செய்தது. அதன்படி நடத்திய சோதனையில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் இதை உறுதி செய்தது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியிடவில்லை.

இந்த தகவல் வெளியான நிலையில் கப்பலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் 380 பேரை மீட்க திட்டமிட்டுள்ள அந்நாட்டு வெளியுறவுத்துறை 2 மீட்பு விமானங்களை அனுப்ப உள்ளது. அவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |