Categories
தேசிய செய்திகள்

700 சிசிடிவி காட்சி….! 7 நாட்கள்….! 100 ரூபாய் வைத்து 6 கோடி கண்டுபிடிப்பு….!!!

டெல்லியில் நூறு ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனை மூலமாக, ஆறு கோடி ரூபாய் நகை திருட்டை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

டெல்லி நஜாபக்கர் நகரை சேர்ந்தவர்கள் நாகேஷ் குமார், சிவம், மனிஷ்குமார் இவர்கள் மூவரும் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல்துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர்களிடம் இருந்த பார்சலை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கடந்த ஏழு நாட்களில் காவல்துறை அதிகாரிகள் சுமார் 700 சிசிடிவி புகைப்படங்களை பரிசோதனை செய்தனர். இதில் ஒரு கொள்ளையன் தேநீர் வாங்கி விட்டு பணத்திற்கு ஈடாக 100 ரூபாய் டிரைவரின் அக்கவுண்டிற்கு paytm மூலம் மாற்றியுள்ளார். அந்த பரிவர்த்தனை பகுப்பாய்வு செய்யப்பட்டு குற்றவாளிகள் நஜாப்களில் வசிப்பவர்கள் என்று அடையாளம் காணப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானுக்கு தப்பி சென்றதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து ஜெய்ப்பூருக்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |