அரசு பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வி கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில் மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையை குறைப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி 1 முதல் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான பைகளையும். 3 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 முதல் 2.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டு செல்ல வரையும் முறை நிர்ணயிக்கப்பட்டது.
6 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு முதல் மூன்று கிலோ எடை பையும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நான்கு கிலோ எடை பையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 4.5 கிலோ வரையிலான பைகளையும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடத்திட்டம் சாராத கூடுதல் நடவடிக்கைகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்க வைக்க வாரத்தில் ஒரு நாள் புத்தகப் பைகள் இல்லாத நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.