தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவரை ட்விட்டர் பக்கத்தில் 2.21 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள். அதனைப் போல பேஸ்புக்கில் 1.45 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். தமிழக அமைச்சரவையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் செந்தில் பாலாஜி சமீபத்தில் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த வாரங்களில் கோவையில் இவர் செய்த மாயாஜால முதல்வர் ஸ்டாலினை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கை நள்ளிரவில் ஹேக் செய்து அடையாளம் தெரியாத நபர்கள் அதில் ‘கிரிப்டோ கரன்சி’ குழு ஒன்றை தொடங்கியுள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதாகவும் பதிவிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ட்விட்டர் அக்கவுண்டின் பெயரை ‘வைரஸ்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத ஒருவரின் புகைப்படத்துடன் “அனைவருக்கும் வணக்கம் எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை” உருவாக்கியுள்ளது. மேலும் அதில், இன்று முன்னெப்போதையும் விட ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்கு தேவை என்று பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எம்று அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாடு முழுவதும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கு முடுக்கப்பட்டு அதில் நிதி உதவி கோரி பதிவிட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.