Categories
பல்சுவை

குறைந்த விலையில் 56 நாட்களுக்கு…!! தினசரி 100 SMS…. ஜியோவின் புது பிளான்…..!!!!

ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறப்பான பிளான் எது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களது பட்ஜெட்டை பாதிக்காத பிளான் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஜியோ-வின் ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்கள் அதிகளவு ரீச்சார்ஜ் செய்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் குறைவான பிளானில் நிறைய வசதிகளை அத்திட்டம் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. ஜியோ-விலுள்ள நீண்ட வேலிடிட்டி மற்றும் சூப்பர் அம்சங்களை உடைய பிளானை நீங்கள் விரும்பினால், 2 மாதங்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஒருபிளான் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான்

2 மாதங்களுக்கு உங்களது பட்ஜெட்டை பாதிக்காத பிளானின் விலை ரூபாய்.533 ஆகும். இந்த பிளான் 56 தினங்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வது பற்றி யோசிக்க வேண்டியதில்லை. மேலும் மிகச் சிறந்த சிறப்பம்சங்களையும் இத்திட்டம் கொண்டிருக்கிறது. ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பல வசதிகளைப் பெறுகின்றனர். முதலில் 56 தினங்கள் வேலிடிட்டி. அதேபோன்று 112 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா. அன்லிமிட்டெட் வாய்ஸ்கால் அழைப்புகள் இருக்கிறது. அத்துடன் வாடிக்கையாளர் நாளொன்றுக்கு 100 s.m.s அனுப்பிக்கொள்ளலாம். கூடுதலாக ஜியோ டிவி ஆப், ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் சந்தா ஆகிய பல்வேறு நன்மைகளும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

Categories

Tech |