சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரவிந்தர்,எங்கள் இருவருக்கும் இடையே இருவது வயது வித்தியாசம் என்று யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை. எனக்கு 38 வயது தான் ஆகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் இரண்டு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.