Categories
மாநில செய்திகள்

திமுக கமலுக்கு சூப்பர் ஆஃபர்…. கப்பென பிடித்த உலகநாயகன்….. செம குஷியில் திமுக…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமலஹாசன். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மறைவிற்குப் பிறகு கமலஹாசனுக்கும் அரசியல் துளிர்விட்டதால் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கிய வேகத்தில் அதிமுக, திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். அதன்பிறகு நடந்தது முடிந்து சட்டசபை தேர்தல் மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நிதி மய்யம் தனித்தே போட்டியிட்டது. இந்த தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் கட்சி பெறவில்லை. இருப்பினும் பிரபல டிவி நிகழ்ச்சி மூலம் கமல் மார்க்கெட்டை உச்சத்தில் வைத்திருந்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை குவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ரஜினியின் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் விக்ரம் படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் லைட் மூவிஸ் வெளியிட்டது. இதன் மூலமாக கமலஹாசன் உதயநிதி ஸ்டாலினுக்கு இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்து கொடுத்ததற்கு நன்றி கடனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படம் தயாரிக்க கமல் முன்வந்துள்ளதாகவும் அதற்கு பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நெருக்கம் அரசியல் ரீதியாகவும் சில மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு அங்கீகாரம் பெற்றே ஆகவேண்டும் என்பதில் கமலஹாசன் உறுதியாக உள்ளார்.

கமலஹாசனின் இந்த மனநிலையை நாடிப்பிடித்து பார்த்த உதயநிதி ஸ்டாலின் இனியும் தனித்து நின்று சீமானை போல் கட்சியின் பொலிவை இழந்து விடாதீர்கள், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு அதற்கான ஆஃபரும் இருக்கு என்று நேரடியாகவே தூண்டில் போட்டுள்ளார். இதற்கு கமல்ஹாசன், அப்படி என்னதான் கிடைக்கும் என்று ஓபனாக கேட்க ஒரே வாரத்தில் திமுக தலமையுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வைகோ கணேஷ் மூர்த்தி ஸ்டைலை உதயநிதி சொல்லி உள்ளார். இதை மகிழ்ச்சியுடன் கமலஹாசன் ஏற்றுக் கொண்டதாகவும் தேர்தல் நெருங்கும் வரை அமைதி காப்போம் என்றும் இரு தரப்பு உறுதி கொண்டு உள்ளதாகவும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் ஒற்றை ஆளாய் சாதித்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாதுர்யத்தை திமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சி தலைவர்களும் கூட குஷியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |