Categories
தேசிய செய்திகள்

ரயில் தாமதமாக வந்தால்….. உங்களுக்கு இது இலவசமாகவே கிடைக்கும்….. பயணிகளுக்கு செம்ம ஜாக்பாட்…!!!!

நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏதாவது ஒரு சூழ்நிலையில் ரயில் தாமதமாக வந்தால் அந்த நேரத்தில் சிக்கலை சந்திக்க நேரிடும். இருப்பினும் ஒரு பயணியாக உங்களுக்கும் சில உரிமைகள் இருக்கிறது. அது குறித்து இப்போது பார்க்கலாம். நீங்கள் செல்ல வேண்டிய ரயில் குறித்த நேரத்தை தாண்டி தாமதமாக வந்ததால் உங்களுக்கு உணவு மற்றும் குளிர் பானத்தை ஐஆர்சிடிசி வழங்குகிறது. இந்த உணவானது ஐஆர்சிடிசி இல் முற்றிலும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இலவச உணவு மற்றும் குளிர்பானத்தை பெற நீங்கள் தயங்க வேண்டியது இல்லை.

ஐஆர்சிடிசி உங்களுக்கு வழங்கிய உரிமையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்திய ரயில்வேயின் விதிகளின்படி ரயில் தாமதமாக வரும் பொழுது ஐஆர்சிடிசி யின் கேட்டரிங் கொள்கையின்படி பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி ரயில் தாமதமாக வரும் பட்சத்தில் காலை உணவில் டீ அல்லது காப்பி மற்றும் இரண்டு பிஸ்கட் மாலை சிற்றுண்டியில் டீ அல்லது காபி நான்கு பிரட் ஸ்லைஸ்கள் ஒரு வெண்ணை பாட்டில் வழங்கப்படுகிறது.

இரவு உணவிற்கு அல்லது மதியம் அரிசி, பருப்பு மற்றும் ஊறுகாய் பாக்கெட் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. அல்லது ஏழு பூரி வெஜ் கலவை, ஆலு பாஜி மற்றும் ஒரு பாக்கெட் உப்பு மற்றும் மிளகு போன்றவையும் வழங்கப்படுகிறது. இந்த வசதியானது பயணிகளுக்கு ரயில் 30 நிமிடம் தாமதமாக வந்தால் உணவு வசதி கிடைக்காது. கேட்டரிங் கொள்கையின் கீழ் ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வந்தால் சதாப்தி, ராஜ்தானி மற்றும் துரந்தோ உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகளுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது.

Categories

Tech |