Categories
தேசிய செய்திகள்

இனி வருமான வரிக்கும் தனியாக ஜிஎஸ்டி வரி?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இனி வருமான வரி தளத்தில் வரி செலுத்தும் போது சில பேமென்ட் முறைகளுக்கு வசதி கட்டணங்கள், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) ஆகியவற்றை செலுத்த வேண்டி இருக்கும்.அதாவது நாம் தேர்ந்தெடுக்கும் சில பேமெண்ட் கேட்வேகளின் மூலம் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும்.உதாரணமாக 30,000 ரூபாய் வருமான வரி செலுத்தினால் தோராயமாக 250 ரூபாய் வசதி கட்டணமும் 50 ரூபாய் ஜிஎஸ்டி கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ-பைலிங் வருமான வரி இணையதளத்தில் உள்ள ‘பேமென்ட் கேட்வே’ மூலம் வருமான வரி செலுத்தினால், வசதியான கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். 30,000 ரூபாய்க்கு 0.85% வசதிக் கட்டணம் அதாவது convenience fee விதிக்கப்படும், இதற்கான தொகை 255 ரூபாயாக இருக்கும். வசதிக்கான கட்டணமான 255 ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரி பொருந்தும், 18 சதவீத வரிக்கு ரூ 45.9 ரூபாய்.

Categories

Tech |