Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொட்டி தீர்க்கும் கனமழை… வெள்ளத்தில் 441 குழந்தைகள் உட்பட 1,264 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 1,625 உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பருவமழை தீவிரமடைந்து இருக்கின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ளநீர் சூழ்ந்து இருக்கின்றது. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கி இருப்பதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி கூறியுள்ளார். இந்த சூழலில் பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்தால் மேலும் 25 குழந்தைகள் உட்பட 57 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1265 ஆக உயர்ந்துள்ளது.

அதில் 441 குழந்தைகளும் அடங்கும். மேலும் 6000-க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்கிடையே வெள்ள நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் முதல் கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷேபாஸ் சரிப் தலைமையில் கூடியுள்ளது. அப்போது வெள்ள நிலைமையை சமாளிப்பது பற்றி விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் வெள்ளம் கனமழை காரணமாக நாடு முழுவதும் மூன்று கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 10.57 லட்சம் வீடுகள் சேதுமடைந்து இருக்கின்றன என அந்த நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. கனமழை  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |