இந்திய தபால் துறை சார்பில் பல்வேறு சிறுசேமித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சேமிப்பு திட்டங்கள் பொது மக்களுக்கு நல்ல லாபத்தை தருகிறது என்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். இதில் செய்யும் முதலீட்டுக்கு உத்தரவாதமும் லாபமும் கிடைக்கிறது. இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் திட்டங்களில் மிகச்சிறந்த திட்டங்களில் ஒன்று ‘தேசிய சேமிப்பு சான்றிதழ்’ ஆகும். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் முதலீட்டு திட்டம் என்பதால் இங்கே முதலீட்டாளர்களின் பணம் வங்கிகளை விட அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.8% ஆகும். தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. இருப்பினும் ஒரு முதலீட்டாளர் சில நிபந்தனைகளுடன் ஒரு வருடத்திற்கு பிறகு கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் நிதியானின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. இதனையடுத்து இந்த திட்டத்தில் குறைந்தது ரூ.1000 முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமானவரி சட்டப்பிரிவு 80சி இன் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இருப்பினும் ரூ.1.5 லட்சம் வரையில் மட்டுமே சலுகை கிடைக்கும்.