இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தைக்கு பிரபல இந்திய உணவின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. கேப்டன்டேபிள் அயர்லாந்திலுள்ள நியூடவுன்பேயில் இருக்கும் ஒரு பிரபலமான உணவகம் ஆகும். அண்மையில் உணவகம் சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்துகொண்டது. அதாவது தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் தற்போது தங்கள் உணவகத்திலுள்ள ஒரு உணவின் பெயரை பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்துள்ளனர் என அவர்கள் பேஸ்புக்கில் அறிவித்தனர்.
அது ஒரு இந்திய உணவின் பெயர் பகோரா ஆகும். மழைக் காலங்களில் தேநீருடன் நாம் ரசித்து சாப்பிடும் பக்கோடாதான் வட மாநிலங்களில் பகோரா என்று அழைக்கப்படுகிறது. பிரசவக்காலத்தில் அந்த குழந்தையின் தாய் பகோராவை அதிகம் விரும்பி உண்டுள்ளார். இதன் காரணமாக தங்களது குழந்தைக்கு அதையே பெயராய் வைக்க முடிவுசெய்துள்ளனர்,