Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடையில் நின்று கொண்டிருந்த நபர்…. வடமாநில வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

செல்போன் திருடிய சிறுவன் உள்பட இரண்டு வரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காந்தி மார்க்கெட் பாரதியார் தெருவில் பாஸ்கர்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோத்தமாத்து மற்றும் 16 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாஸ்கரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை பார்த்த பாஸ்கர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |