ராஜநாகப் பாம்பு சிறியஉயிரினங்களை எவ்வாறு வேட்டையாடுகிறது என்பதை சமீபத்திய வைரல் வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில் கோழி தன்னுடைய குஞ்சுகளுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்போது ராஜநாகம் ஒன்று குஞ்சுகளை இரையாக்க அங்கு வந்துசேர்ந்தது. சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், நாகப்பாம்பு குஞ்சுகளை இரையாக்க எவ்வாறு துடிக்கிறது என்பதை காணலாம். கோழியின் கண்கள் தன் மீது படாத அடிப்படையில் குஞ்சுகளை ரகசியமாக குறி வைக்க ராஜநாகம் நினைக்கிறது. ஆனால் தனது குஞ்சுகளை காப்பாற்ற கோழி சிறிதும் அஞ்சாமல், உயிரை துச்சமாக மதித்து ராஜநாகத்துடன் சண்டையிடுகிறது. இரண்டுக்கும் இடையில் நீண்டநேரம் சண்டை நடக்கிறது.
அந்த சண்டையின்போது பலமுறை பாம்பும், கோழியை கொத்த முயற்சிக்கிறது. எனினும் கோழி பயமின்றி நாகத்தை எதிர் கொண்டு தன் குஞ்சுகளைக் காப்பாற்றுகிறது. ராஜநாகத்தின் தாக்குதலால் முதலில் கோழி அதிர்ச்சி அடைந்தது. இருப்பினும் தைரியம் இழக்காமல் குஞ்சுகளைக் காப்பாற்றுவதற்காக ராஜநாகப்பாம்பை எதிர்த்து நின்றது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின், தனது குஞ்சுகளை பாம்புக்கு எட்டாத இடத்திற்கு அழைத்துச்சென்றது. வைரலாகி வரும் நாகபாம்பு வீடியோ WILD COBRA என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றப்பட்டு உள்ளது.