Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |