Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…. அதிரடி காட்டிய இபிஎஸ்…. இது வேற லெவல் டுவிஸ்ட்…..!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில்  நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பொதுக்குழு வழக்கில் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

Categories

Tech |