Categories
மாநில செய்திகள்

“அதுதான் எனக்கு மகிழ்ச்சியை தரும்”…. தமிழச்சி தங்கபாண்டியன் அதிரடி பேச்சு….!!!!

ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 17-வது பட்டமளிப்புவிழா சென்னையில் நடந்தது. இவற்றில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் 1159 பட்டதாரிகள், 75 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு பல்கலைக்கழக தரவரிசை விருதுகளும், 4 மாணவர்களுக்கு கல்வியில் முன் மாதிரியாக செயல்பட்டதற்காக நம்பிக்கை விருதுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்ச்சியின் போது ஜேப்பியார் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் படனடையும் விதமாக ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக 1 கோடி ரூபாய் காப்பீட்டு மானியத்தை ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை வழங்கியுள்ளது.

அதன்பின் பட்டமளிப்பு விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றியபோது, பெண் சிங்கங்களே, ஆண் மயில்களே என மாணவ-மாணவியர்களை அழைத்தார். பெண் சிங்கங்கள் தான் வேட்டையாடும் எனவும் ஆண்மயில்களுக்கு தான் அழகான தோகை உண்டு எனவும்  விளக்கமளித்த அவருக்கு மாணவர்கள் தங்களது கைதட்டல்களால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆசிரியர் பெற்றோருக்கு பிறந்த நான் சொந்த ஊருக்கு சென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் என மக்கள் அழைக்கமாட்டார்கள் எனவும் ஆசிரியரின் மகள் என அழைப்பார்கள் எனவும் அவர் கூறினார். எனினும் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும்.

ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்கள் முக்கோணம் போல செயல்படவேண்டியது குறித்தும், இந்த மூவரின் பிணைப்பு பற்றியும் பல எடுத்துக்காட்டுகளுடன் அவர் விரிவாக எடுத்துரைத்தார். அத்துடன் கல்விகொடுத்த பாடசாலைகளுக்கு மாணவர்கள் தங்களால் ஆன உதவியை திரும்பச்செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், ஜேப்பியார் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மு.ரெஜீனா ஜேப்பியார், பல்கலைக்கழக அதிபர் முரளி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Categories

Tech |