ஆஞ்சநேயருக்கு ஏன் வெண்ணை வழிபாடு செய்து வடை மாலை சாத்துகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். வெண்ணை எப்படி உருகுகிறதோ அது போல ராம நாம ஜெபத்தினால் ஆஞ்சநேயரும் தன் உள்ளம் உறங்குகிறார். மேலும் வெண்ணெய் என்பது குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் ஆகும். ராமனுக்கும் ராவணனுக்குமான போரில் அனுமன் பெரிய பொறுப்பை வகித்தார்.
அதோடு அனுமன் ராமனுக்கு உறுதுணையாகவும் நின்று போர்க்களத்தில் பாறைகளையும் மலைகளையும் பெயர்த்தெடுத்து கடும் யுத்தம் புரிந்தார். இதில் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணை சாத்தி வழிபடுகிறோம். மேலும் போரில் மூர்க்க குணம் கொண்ட அரக்கர்களை தனது உடல் வலிமையால் அவர்களை புரட்டி எடுத்து துவம்சம் செய்தார். அதனால்தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தை சேர்த்து அவருக்கு வடை மாலை செய்து சாத்துகிறோம். இதுவே அதற்கான சிறந்த காரணமாகும்.