Categories
விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி: விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் எடுத்த திடீர் முடிவு….!!!!

வங்காளதேசம் அணியின் முன்னணி விக்கெட்கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் ஆவார். 35 வயதான முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். தன் 16 வயதில் வங்காளதேச அணிக்காக கடந்த 2005ம் வருடம் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர் டி20 போட்டிகளில் கடந்த 2006 ம் வருடம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். சென்ற 2007ம் வருடம் முதல் டி20 உலககோப்பைகளில் வங்காளதேச அணிக்காக முஷ்பிகுர்ரஹீம் ஆடி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பைக்கு அந்நாட்டு அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹீம் தன் ஓய்வுமுடிவை அறிவித்து உள்ளார்.

தன் ஒய்வு பற்றி முஷ்பிகுர் ரஹீம் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வுபெறுகிறேன். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் என் கவனத்தை செலுத்த இருக்கிறேன். அதுமட்டுமின்றி ஐ.பி.எல் போன்று வெளிநாடுகளில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர்களில் வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவேன் என கூறியுள்ளார். அத்துடன் எம்.ஆர்.15 என்ற பெயருடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் என் நாட்டுக்காக விளையாட காத்துக்கொண்டிருக்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.

அண்மையில் நடந்து கொண்டிருக்கிற ஆசியகோப்பை தொடரில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து முஷ்பிகுர் ரஹீம் தன் ஓய்வுமுடிவை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வங்காளதேசஅணிக்காக 82 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 102 டி-20 போட்டிகளில் ஆடியிருக்கிறார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் 5,235 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்களும், டி-20 போட்டிகளில் 1,500 ரன்களும் அடித்து இருக்கிறார்.

Categories

Tech |