வீட்டு உரிமையாளரின் கையை கடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூர் மங்களேரி பகுதியில் கமலாபாய்(68) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகராஜ்(37) என்பவர் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் திலகராஜ் வாடகை பணத்தை சரியாக கொடுக்கவில்லை. இதனை கமலாபாய் கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த திலகராஜ் கமலாபாயின் கையை கடித்ததோடு, வீட்டிலிருந்த குக்கர் முடியால் கமலபாயின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் காயமடைந்த கமலாபாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமுறையாக இருந்த திலகராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.