கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்குவர இருக்கிறது. முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது.
பொன்னியின் செல்வன் முதல்பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் புது கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அவற்றில் ஒவ்வொரு ரோஜாவிற்கும் முட்கள் உண்டு. சக்கர வர்த்தி, ராணி தாய் மற்றும் அனைத்தையும் விரும்பும் மகன்! பிரகாஷ்ராஜ் சுந்தர சோழராகவும், ஜெய சித்ரா செம்பியன் மாதேவியாகவும் மற்றும் ரஹ்மான் மதுராந்தகனாகவும் நடித்து இருப்பதாக சிறிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Every rose has its thorns. The Emperor, the Queen Mother and the Son who wants it all!
Meet @prakashraaj as Sundara Chozhar, Jayachitra as Sembiyan Maadevi and @actorrahman as Madhurantakan!
2 days to go for the Grand audio and trailer launch of #PS1!! #PonniyinSelvan pic.twitter.com/VnXjRHUDR4
— Lyca Productions (@LycaProductions) September 4, 2022