சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவின் இறுதி சடங்கு அரசு முழு மரியாதை இல்லாமல் நேற்று நடைபெற்றுள்ளது. உள்ளூரில் இருந்த போதும் அதிபர் புதின் இதை புறக்கணித்துள்ளார் சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவ் அமெரிக்க சோவியத் யூனியன் இடையே பல வருடங்களாக நிலவி வந்த பணிபோர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 91 வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்துள்ளார். கார்பசேவின் இறுதி சடங்கு மாஸ்கோவில் நடைபெற்றுள்ளது. புகழ் பெற்ற நோவோடெவிசி கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு முன்பாக அவருடைய உடலுக்கு ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆனால் மாஸ்கோவில் இருந்த போதிலும் அதிபர் புடின் இதில் பங்கேற்கவில்லை. கடந்த வியாழக்கிழமையே தனிப்பட்ட முறையில் மருத்துவமனைக்கு சென்று அவர் அஞ்சலி செலுத்தி விட்டு வந்துள்ளார். மேலும் கார்பசேவுக்கு ரஷ்ய அரசின் முழு மரியாதையும் நேற்று வழங்கப்படவில்லை இறுதி ஊர்வலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு முழுமையாக அளிக்கப்பட்டால் இறுதி சடங்குக்கு வெளிநாட்டு தலைவர்களையும், பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டி இருக்கும் அதனை தவிர்ப்பதற்காக அரசு மரியாதையை புடின் வழங்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.