Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு….. முக்கிய தகவல் வெளியீடு…. உடனே பாருங்க….!!!!

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து பிரம்மோற்சவ நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரை கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பக்தர்கள் கலந்து கொள்வதுடன் பிரம்மோற்சவத்தை நடத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. அத்துடன் இதற்கான அட்டவணையையும் தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பதி தேவஸ்தானத்தில் வருகிற 6 மற்றும் 21ம் தேதி அன்று சர்வ ஏகாதசி கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து 7ம் தேதி அன்று வாமன ஜெயந்தியும் 9ம் தேதி அன்று அனந்த பத்மநாப விரதமும், 11ம் தேதி மகாளய பக்‌ஷம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு 20ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கும். இந்த விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் திருவிழாவும் , 25ம் தேதி மஹாளய அமாவாசையும், 26ம் தேதி பிரம்மோற்சவ விழாவும், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட திருவிழாக்கள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 27ம் தேதி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |