ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து பலரும் உயிரிழந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான விளம்பரத்தில் நடிப்பது குறித்து சரத்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து சரத்குமார் கூறியதாவது, ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அரசு என்ன முடிவு எடுக்கிறது என்பதை முதலில் அரசிடம் கேளுங்கள்.
சரத்குமார் நடிப்பது பற்றி இரண்டாவது கேளுங்கள். ஆன்லைனில் ரம்மி ஆட்டம் மட்டும் அல்ல, கிரிக்கெட் உள்ளிட்ட எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளன. அதுவும் சூதாட்டம்தான். இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக நிறுத்தினால்தான் இதிலிருந்து எல்லாரும் விடுபடுவார்கள் என தெரிவித்துள்ளார்.