Categories
உலக செய்திகள்

“சில வருடங்களாக என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்”… நடிகர் பிரசாந்த் சுவிஸில் வசிக்கும் பெண் மீது புகார்…!!!!!!

நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் மோசடி புகார் கொடுத்திருக்கின்ற நிலையில் பிரசாந்த் தரப்பிலிருந்து இது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. இலங்கையைச் சேர்ந்த குமுதிணி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலைய ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் நடிகர் பிரசாந்த் தன்னிடம் 10 லட்சம் ரூபாய்  மோசடி செய்துள்ளதாக சென்னையில் உள்ள காவல்துறையில் வாய்மொழி புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பிரசாந்த் தரப்பும் அந்த பெண் மீது புகார் அளித்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது.

இந்த இரு புகார்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது காவல்துறை. இது தொடர்பில் பிரசாந்த் தரப்பு விரிவாக விளக்கம் அளித்து இருக்கின்றது. பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் உதவியாளர் ஆனந்த் புகார் மனு ஒன்றை சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதன் முழு விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் குமுதினி சிலமுறை எங்கள் வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்திருக்கின்றார். சில வருடங்களாக என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் செயல்படுகின்றார் அதனால் குமுதினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் குமுதினி அளித்த புகார் தொடர்பாக எந்த விதமான ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என காவல்துறையினர் தற்போது தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |