Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அண்ணன் மரணிக்க….. தம்பியும் சவுதியில் மரணம்….. உடலை கொண்டு வர….. கண்ணீர் மல்க தாய் கோரி….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவுதியில் இறந்த மகனின் உடலை மீட்டு தரக்கோரி உதவி கலெக்டரிடம் தாய் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை அடுத்த சிவந்திபட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் அல்லி பப்பா.  இவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். கணவனை இழந்து இவர் குழந்தைகளை பராமரித்து வளர்த்து இரண்டு பெண்களையும் நல்ல இடத்தில் கட்டி கொடுத்ததோடு மூத்த மகனுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். இளைய மகன் வேல்முருகன் என்பவன் சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

31 வயதான நிலையில் இவருக்கு திருமணம் இன்னும் நடைபெறவில்லை. மூத்தமகன் வடிவேல் விவசாய தொழில் செய்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட சோகத்தில் தனியாக அல்லி பப்பா  அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது மகன் வேல்முருகன் சவுதி அரேபியாவில் இறந்துவிட்டதாக கோவில்பட்டி கோட்டாட்சியர் அல்லி பப்பாவிடம் தகவல் தெரிவிக்க கதறி அழுத அவர்,

நேற்றைய தினம் மகனின் உடலை கோவில்பட்டிக்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு அளித்தார். இதனை பெற்ற அவர் உடலை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாக உத்தரவு அளித்துள்ளார். மூத்த மகனை இழந்த ஓரிரு ஆண்டுகளிலேயே இரண்டாவது மகனையும் இழந்த தாய் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |