டெடி,சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்திருக்கின்ற திரைப்படம் கேப்டன். இந்த திரைப்படம் வருகின்ற எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா, ஹரிஷ், உத்தமன் காவியா ஷெட்டி போன்றோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நடிகர் ஆர்யா சென்று கேப்டன் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகின்றார். இந்த நிலையில் கோவையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கேப்டன் படத்தின் முதல் ட்ரைலரை நடிகர் ஆர்யா பார்த்து அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்.
அதன்பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய போது, எனக்கு ஸ்பெஷல் மூவி என்றால் அது ராஜா ராணி தான். அந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கியிருக்கிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல் வித்தியாசமான முறையில் தற்போது கேப்டன் படத்தை எடுத்திருக்கின்றோம் அனைவரும் திரையரங்குக்கு வந்து திரைப்படத்தை காண வேண்டும். இந்த திரைப்படம் ஆர்மி பேக்ரவுண்டை மையமாகக் கொண்டு கதை தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கும் பொது மக்களுக்கு நல்ல கதைகள் பிடிக்கிறது நல்ல கதைகளை விரும்பி பார்க்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.