Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இடையே நல்ல புரிதல் ஏற்படும் வகையில் எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் வினை இயக்குனர்கள், முதன்மை, மாவட்ட மற்றும் வட்டார கல்வி அதிகாரிகள், பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு பணி திறன் மேம்பாடு,தலைமை திறன் மற்றும் மேலாண்மை தொடர்பாக ஒவ்வொரு வருடமும் உள்ளுறை பயிற்சி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தலைமை பண்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 7 முதல் 28ஆம் தேதி வரை சென்னையில் நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவைத்துள்ளது.

Categories

Tech |