Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வேலை இல்லை….. ஊதியம் இல்லை….. விரக்தியில் தற்கொலை….. இன்ஜினியர் இளைஞர் மரணம்…..!!

தூத்துக்குடி அருகே படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை அடுத்த பண்டாரவிளை வன்னியனுர் பகுதியில் வசித்து வருபவர் இரட்டை முத்து. இவருக்கு   சரவணன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இருவரும் தூத்துக்குடியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளனர். இருவருக்கும் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்காமல், எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காமல் மனவருத்தத்தில் பணிக்கு சென்று வந்துகொண்டிருந்தனர்.

நாளடைவில் சரண்யா அதனை பெரிதாக ஏற்றுக்கொள்ளாமல் பணிக்கு சென்று வந்துகொண்டிருந்தார். ஆனால் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல்  மனவேதனையில் சோகமாகவே சுற்றி திரிந்துள்ளார் சரவணன். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் அனைவரும் தூங்கியபின் குளியலறைக்குச் சென்று உள்பக்கமாக தாழ்பாள் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின் காலை உறவினர்கள் குடும்பத்தினர்கள் எழுந்து சரவணனை தேடி எங்கு தேடியும் கிடைக்காததால் குளியல் அறையை சோதனையிட்ட போது அது உள்பக்கமாக பூட்டி இருந்தது. அதை உடைத்து பார்வையிட்டபோது தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.

இதையடுத்து அவரை காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்கள்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |