Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. தப்பியோடிய டிரைவர்…. போலீஸ் வலைவீச்சு….!!

ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலாட்டின் புத்தூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது லிங்கம்பட்டி கிராம சாலையில் எதிரே வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இதனையடுத்து ஆட்டோவில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 2 பேரும் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பிசென்று விட்டனர்.

அதன்பின் காவல்துறையினர் லோடு ஆட்டோவில் செய்த சோதனையில் 50 கிலோ எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் தப்பியோடிய லோடு ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |