மகரம் ராசி அன்பர்களே…!
நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும்.
உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். அஜீரணம் கோலாருகள் போன்றவை ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். மனைவியின் பேச்சால் சிலருக்கு பகைகல் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அதிகாரியிடம் பணிவாக நடத்தல் அவசியம். மனகுழப்பம் கொஞ்சம் இருந்துகொண்டே இருக்கும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பெரியோரிடம் தயவுசெய்து ஆலோசனை கேளுங்கள். மற்றவர்களிடம் பழகும் பொழுதும் கொஞ்சம் கவனத்தோடு இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம், அந்தஸ்து கூடினாலும் சில விஷயங்களில் கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபத்தைக் கொடுத்தாலும், அலச்சல் மட்டும் கூடி கொண்டே இருக்கும் அதனால் உடல் சோர்வு ஏற்படும்.
மாலை நேரங்களில் சில தேவையில்லாத பிரச்சினைகளில் தலையீட கூடும். தயவுசெய்து பஞ்சாயத்துக்களில் மட்டும் தலையிட வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் இன்று குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம். காதலர்கள் இன்று பொறுமை காப்பது ரொம்ப ரொம்ப நல்லது. கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் கண்டிப்பாக பேசி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையை கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லப்படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.