Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாயை அழைப்பதற்காக சென்ற மகன்…. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

திருமணமான 4 மாதத்தில் புதுமாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி எல்.என் புரத்தில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜ்குமார், ராஜ்கமல்(30) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜ் கமல் பெங்களூருவில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு ராஜ்கமலுக்கு குணசுந்தரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் விஜயலட்சுமியும் குணசுந்தரியும் வெளியூர் சென்று விட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அவர்களை ராஜ்கமல் மோட்டார் சைக்கிளில் அழைப்பதற்காக சென்றுள்ளார். முதலில் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது தாயை அழைத்து வருவதற்காக ராஜ்கமல் பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது சென்னை சாலையில் இருக்கும் ரயில்வே மேம்பாலத்தில் விஜயலட்சுமி நடந்து வந்து கொண்டிருந்தார்.

இதனால் ராஜ்கமல் மோட்டார் சைக்கிளை திருப்பியபோது சவ ஊர்வலத்தின் போது ரோட்டில் வீசப்பட்டு மழையில் நனைந்து கிடந்த மலர் மாலை வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜ் கமலின் தலை பாலத்தின் சுவரில் மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற ராஜ்கமலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |