மின்னல் தாக்கி மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டக்காரன் கொட்டாய் பகுதியில் விவசாயியான மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதால் மாதேஷ் வளர்த்த ஒரு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மாதேஷின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களும் சேதம் அடைந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.