பொதுவாகவே தனது படங்களில் போதைப்பொருட்கள் பற்றி குறிப்பிடுவதை லோகேஷ் கனகராஜ் வழக்கமாக வைத்திருக்கிறார். அது ஏன்? என்பது குறித்து அவர் கூறியதாவது “தற்போது போதைப்பொருட்களின் பயன்பாட்டை அதிகமாகவே பார்க்க முடிகிறது. இதை முற்றிலுமாக தடுக்கத்தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். என்னுடைய படத்தில் போதைப்பொருட்கள் குறித்து கூறுவதின் காரணமும் இதுதான்.
போதைப்பொருட்களுக்கு எதிரான செயல்பாட்டில் பெரிய நட்சத்திரங்கள் நடிப்பதன் மூலம் அவர்களது ரசிகர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என்பதுதான் என் நம்பிக்கை. அதற்காகத்தான் என் படங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் எடுத்துரைத்து வருகிறேன்” என்றார்.